முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த அன்புமணி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Anbumani 2024-12-08

Source: provided

கடலூர் : கடலூர் கண்டகாடு பகுதியில் பா.ம.க. சார்பில் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ் அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். 

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. சார்பில் மருத்துவ முகாம் கடலூர் கண்டகாடு பகுதியில் நேற்று காலை நடைபெற்றது.  மருத்துவ முகாமை தொடங்கி வைத்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், 

இந்த மருத்துவ முகாம் என்பது மிக அவசியமானது என மருத்துவர் என்ற முறையில் நான் செய்து உள்ளேன்.  இந்த புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு இருப்பது இயற்கையானது. இதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. 

இதனால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு சார்பில் முடியும். அதுதான் அரசாங்கத்தின் வேலையாகும்.  இந்த பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நானும் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டித்து உள்ளோம். 

ஒரு பக்கம் தவறு நேரிட்டாலும் அதற்கு மாறாக நிவாரணம் மற்றும் உதவி செய்திருக்க வேண்டும். ஆனால் ரூ.2 ஆயிரம் மட்டும் நிவாரணம் வழங்கினால் மக்கள் என்ன செய்வார்கள்?  சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் 9-வது மாடியில் இருக்கும் நபர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். 

தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டபோது 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். ஆனால் கடலூரில் வெள்ளம் ஏற்பட்டால் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி போன்ற மக்கள் பாவம் பட்டவர்களா?

இது போன்ற மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்கு சிகிச்சை பெறும் மக்களை தொடர்ந்து பின்பற்றி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சரி செய்ய எவ்வளவு பெரிய போராட்டம் நடத்த தயங்க போவதில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு அனைத்தையும் அரசு கொடுக்க அழுத்தம் கொடுத்து செய்து கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து