முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.சி.க.வின் நலனுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடு உள்ளது : மதுரையில் திருமாவளவன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Thirumavalavan 2024 09 14

Source: provided

மதுரை : ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக் கால செயல்பாடு வி.சி.க.வின் நலனுக்கு எதிராகவே இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையிலுள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்  நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசியளவில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. புதிய கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவையில்லை. தி.மு.க. கூட்டணியை கட்டுப்பாடின்றி சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் சதி திட்டமாக இருக்கும்.

அ.தி.மு.க., பா.ஜ.க.வின் நோக்கமும் தொடர் வெற்றியை சட்டமன்றத்திலும் பெற்று விடாமல் இக்கூட்டணியை சீர்குலைப்பதே நோக்கம். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என, சிலர் முயற்சிக்கின்றனர். 

கூட்டணிக் கட்சியில் எங்களுக்கு ஒரு அழுத்தமும் இல்லை. அதற்கான சூழலும் அங்கில்லை. தி.மு.க. அழுத்தம் கொடுத்திருக்கிறது என்றால் ஆரம்பத்திலேயே அப்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என, சொல்லி இருப்பேன். அது ஒரு யூகமாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. நான் சுயமாக எடுத்த முடிவு.

விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய் தி.மு.க. அரசை முதன்மை எதிரி என, வெளிப்படையாக அறிவித்த நிலையில், நானும், அவரும் நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாமல் இருந்தாலும் அதையும் அரசியலாக்குவர். இதற்காக பலர் காத்திருக்கின்றனர். 

விஜய் மீது எனக்கு ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.  துணை பொதுச் செயலாளர்கள் 10 பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போதும், கட்சிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்படும் போதும், தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சி நடைமுறை. 

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை என்றால் உயர்நிலைக் குழு கவனத்திற்கு சென்று சம்பந்தப்பட்டோர் மீதான குற்றச்சாட்டு எந்தளவுக்கு முகாந்திரம் உள்ளது என, உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் தலைவரின் கடமை. எனவே, ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கின்றனர். 

இது பற்றி கட்சி தலைமையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருகின்றனர். இது குறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி உள்ளோம். இது தொடர்பான முடிவு விரைவில் வெளிவரும். என்னை கட்டுப்படுத்தி இயக்க யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் கிடையாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து