முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் பரபரப்பு: ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2024      உலகம்
Yun-Suk-Eyol-2024-12-12

சியோல், தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிறப்பித்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பிய நிலையில் தென்கொரியா ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார். இதற்கிடையே அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் ராணுவ அமைச்சர் கிம் யாங் ஹியூன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் சியோலில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது கழிவறைக்கு சென்ற அவர் தனது ஆடையை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து தென்கொரியா அதிபர் அலுவலகத்தில் போலீசார் புகுந்து ரெய்டு நடத்தினர். இந்தநிலையில் அந்த நாட்டில் தலைமறைவாக உள்ள தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய முக்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து