முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசால் இந்தியாவிற்கு பெருமை: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2024      விளையாட்டு
Chess-2024

Source: provided

புதுடெல்லி: உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில்...

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

விறுவிறுப்பாக... 

இந்த நிலையில், நேற்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டி நேற்று பிற்பகலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டிராவை நோக்கியே போட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

18 வயதிலேயே... 

ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சதுரங்க சக்தியாக... 

இதுதொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், "உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற இளம் வீரர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் அதிகாரத்தை ஒரு சதுரங்க சக்தியாக முத்திரை குத்துகிறது. சபாஷ் குகேஷ்! ஒவ்வொரு இந்தியர் சார்பாகவும், நீங்கள் எதிர்காலத்தில் புகழ் பெற வாழ்த்துகிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

வரலாற்றில் பெயர்... 

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "இது ஒரு வரலாறு மற்றும் முன்மாதிரி..! அவரது குறிப்பிடத்தக்க சாதனைக்கு குகேஷ்-க்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவே அவரது வெற்றி, சதுரங்க வரலாற்றின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து