முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பி.சி.சி.ஐ. செயலாளராக தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பன்முகத்திறன்... 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால், செயலாளர் பதவிக்கு தேவஜித் சைக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கிரிக்கெட், சட்டம், நிர்வாகம் எனப் பன்முகத் திறன் கொண்டவர். இவரது கிரிக்கெட் வாழ்க்கை, ஒப்பீட்டளவில் குறுகியதாக இருந்தபோதிலும், முதல்தர கிரிக்கெட் வீரராகவே இருந்து வந்தார். கிரிக்கெட்டுக்குப் பிறகு, 28 வயதில் கவுகாத்தி  உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

அணியின் சரிவு...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியாவின் செயல்திறன் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டதுதான், தேவஜித்தின் முதல் செயலாளர் பணியாக இருந்தது. இந்த விவாதக் கூட்டத்தில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மாவும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சரிவு குறித்துதான் இந்தக் கூட்டத்தில் நீண்ட விவாதமாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய காரணம்...

இந்திய அணி வலுவாக இருந்தபோதிலும், இந்திய பேட்ஸ்மேன்களால் ஏன் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதை நிர்வாகம் புரிந்து கொள்ள விரும்பியது. முக்கிய காரணங்களை அடையாளம் காண்பதிலும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்று விவாதிக்கப்பட்டதாகவும், சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் விவாதத்தில் கூறப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் கூறின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து