முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சஞ்ஜிதி பகுதியருகே நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 9-ந்தேதி திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். 

இந்நிலையில், அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், முதலில் 4 பேரின் உடல்களை மீட்பு குழு மீட்டது. 3 ஆயிரம் அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்க கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியின் ஒரு பகுதியாக, மீதமுள்ளவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால், சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து