முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் முடிந்தன : அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      தமிழகம்
EVa-Velu 2023 04 01

Source: provided

சென்னை : வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்ததையொட்டி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் ரூ.80 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாடிப்பகுதி, கிழக்கு பகுதி கேலரி பணிகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், மீதமுள்ள கலையரங்கம், ஸ்தபதி பணிகள்,கலையரங்கம் சுற்றி பேவர் பிளாக் தரை, நீரூற்று, குறள் மணிமாடம் பணிகள், திருக்குறள் அவையரங்கம், சுற்றுச் சுவர்,தெற்கு நுழைவாயில், புல்தரை அமைத்தல், தீ தடுப்பு வசதி, பெயர் பலகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

மேலும் வள்ளுவர் கோட்டம் அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன் ஐஏஎஸ், முதன்மை தலைமை பொறியாளர் மணிவண்ணன் , தலைமை பொறியாளர் மணிகண்டன், கண்காணிப்பு பொறியாளர் ஜெய்கர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து