முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி மும்பை இந்தியன்ஸ்: நீதா அம்பானி

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      விளையாட்டு
Mumbai 2024-04-05

Source: provided

நியூயார்க் : மும்பை இந்தியன்ஸ்  அணி இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது  என நீதா அம்பானி  தெரிவித்தார்.

அமெரிக்காவில் நீதா...

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்தாண்டு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றார். இந்தாண்டும் அவர் கேப்டனாக நீடிக்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானி, பாண்டியா சகோதரர்கள், பும்ரா, திலக் வர்மா போன்ற திறமையான வீரர்களை அறிமுகப்படுத்தியது குறித்து விவரித்துள்ளார்.

வெளிகொண்டுவருவது அவசியம்...

அவர் பேசியதாவது: “ஐ.பி.எல். பொறுத்தவரை அனைத்து அணிகளுக்கும் குறிப்பிட்ட பட்ஜெட் மட்டுமே ஒதுக்குவார்கள். அதனால், குறிப்பிட்ட தொகையில் திறமையான வீரர்களை வெளி கொண்டுவர வேண்டியது அவசியம். அதனால், ஒவ்வொரு ரஞ்சி கோப்பை மற்றும் உள்நாட்டு தொடர்களுக்கு நானும் எனது குழுவும் சென்று வீரர்களை பார்ப்போம்.

நூடுல்ஸ் மட்டுமே...

ஒருநாள், மெலிந்த இரண்டு இளம் வீரர்களுடன் உரையாடினோம். அவர்களுடன் நான் பேசியபோது, பணமில்லாததால் மூன்று ஆண்டுகளாக மேகி மற்றும் நூடுல்ஸ் தவிர வேறெதுவும் சாப்பிடவில்லை என்று கூறினார்கள். ஆனால், வாழ்க்கையில் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அவர்களிடம் பார்த்தேன். அவர்கள்தான் ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்டியா.

பெருமைமிக்க கேப்டன்...

2015ஆம் ஆண்டு ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினேன். இன்று அவர் எங்கள் அணியின் பெருமைமிக்க கேப்டன். அடுத்தாண்டே எங்கள் அணியில் வித்தியாசமான உடல்மொழியுடன் பந்துவீசும் இளம் வீரரை அறிமுகப்படுத்தினோம். மற்றதெல்லாம் வரலாறு.

நர்சரி பள்ளி...

கடந்தாண்டு திலக் வர்மாவை அறிமுகப்படுத்தினோம். அவர் தற்போது இந்திய அணியின் பெருமைமிக்க வீரராக உள்ளார். எனவே, மும்பை இந்தியன்ஸை இந்திய கிரிக்கெட்டின் நர்சரி பள்ளி என்று அழைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து