முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
appavu 2025-01-06

Source: provided

சென்னை : சட்டசபையில் கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை கடந்த 14-ந்தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது தினமும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில், சட்டசபை நேற்று காலை தொடங்கியது.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

 அமைச்சர்களும் சரி... உறுப்பினர்களும் சரி.. கேள்விகளும், சுருக்கமாக இருக்க வேண்டும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும். சில விளக்கங்கள், தவிர்க்க முடியாத அளவுக்கு ஒரு பக்கத்திற்கு இருந்தால் கூட அது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். இன்று (நேற்று) முதல் 1 மணி நேரம், சரியாக 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கேள்வி நேரம் முடிக்கப்படும். காரணம் இந்த அவை காலம் தாழ்த்தி நடப்பது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே இன்று (நேற்று) முதல் தவறாமல் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் ஸ்டாலின் குமார்   துறையூர் தொகுதியில் அம்மாபட்டி, காளிபட்டி பெத்துபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விடியல் பயண திட்டதின் கீழ் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபடுமா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய, பேரவைத் தலைவர் அப்பாவு, பஸ் ஸ்டான்டில் கண்டெக்டர் சொல்லுவார் இந்த இந்த ஊர்களுக்கு எல்லாம் பஸ் போகும் என்பது போல் உள்ளதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், நேரில் ஆய்வு செய்து, அனைத்து பட்டிகளுக்கும் விடியல் பயணத் திட்டத்தின் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து