முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் 2-ம் பட்சமாக மாறும்: தெலுங்கானா முதல்வர்

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      தமிழகம்
Revanth Reddy-2025-03-22

சென்னை, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால்  தென் மாநிலங்கள் இரண்டாம் பட்சமாக மாறும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்களுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாடு இன்று மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. பா.ஜ.க. மக்கள் தொகை அபராதக் கொள்கையை அமல்படுத்த நினைக்கிறது.  கடந்த 1976-ம் ஆண்டு நாடு குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்ட போது  தென்மாநிலங்கள் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டின. வட இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்கள் அதில் தோல்வியைத் தழுவின. அதேபோல் தென்மாநிலங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது.  

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை தெற்கு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அப்படி நடந்தால் வடக்கு மாநிலங்கள் நம்மை இரண்டாம் பட்சமாக மாற்றும். இந்த மறுவரையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளாதீர்கள்.

தற்போது மக்களவையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 24 சதவீதம். தொகுதி மறுவரையை நடத்தியே தீர்வது என்று மத்திய அரசு விரும்பினால் மொத்தமுள்ள ஐந்து தென்மாநிலங்களுக்கான மக்களவைப் பிரதிநிதித்துவத்தை 30 சதவீதமாக உயர்த்துங்கள். இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.

இந்த கூட்டத்தில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ், பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் தாஸ் புர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து