எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவெறி கருத்துகளால் விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதனிடையே, ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத் திடலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஹர்பஜன் சிங் வர்ணனை செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. ராஜஸ்தானின் நட்சத்திர வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவருமான ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வழங்கி மோசமான சாதனையைப் படைத்தார். இதுகுறித்து வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங் பேசுகையில், “லண்டனின் கருப்பு நிற டேக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் (ரன்கள்) அதிகளவில் இருக்கிறது” என்று விமர்சனம் செய்தார். இந்திய அணிக்காக விளையாடிய காலத்தில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, தான் இனவெறியால் பாதிக்கப்பட்டதாக ஹர்பஜன் சிங் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்த கருத்துகளை பகிர்ந்து தற்போது ஹர்பஜன் சிங்கே இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக பதிவிட்டு கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
____________________________________________________________________________
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள்
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 76 ரன்களை வழங்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 242 ரன்கள் எடுத்தது. 44 ரன்களில் ஆட்டத்தை வென்றது கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இதற்கு முன்னர் கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதை தற்போது மிஞ்சியுள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர்கள்: 0/76 - ஆர்ச்சர் - 2025ம் ஆண்டு சீசன், 0/73 - மோஹித் சர்மா - 2024ம் ஆண்டு சீசன், 0/70 - பஸில் தாம்பி - 2018ம் ஆண்டு சீசன், 0/69 - யஷ் தயாள் - 2023ம் ஆண்டு சீசன், 1/68 - ரீஸ் டாப்லி - 2024ம் ஆண்டு சீசன்
____________________________________________________________________________
ஸ்டம்பிங்கை புகழ்ந்த ஹேடன்
43 வயதான தோனி, விளையாட்டு களத்தில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். 5 முறை சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல் பட்டம் வென்று கொடுத்த கேப்டனான தோனி, தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தொடர்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தற்போது விளையாடாத நிலையிலும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் அபாரமாக உள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் செயல்பட்டார்.
மும்பைக்கு எதிரான போட்டியில்துல்லிய செயல்பாட்டை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். அந்த பட்டியலில் ஹேடனும் இணைந்துள்ளார். “அவருக்குள் அந்த ஃபயர் இன்னும் அப்படியே இருக்கிறது. நூர் அகமது பந்தை லெக் திசையில் வீசிக் கொண்டிருந்தார். பேட்ஸ்மேன் முன்னாள் இருப்பதால் பகுதி அளவில் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் பந்தை பிடித்து ஸ்டம்ப் செய்தது அபாரம். அதில் குயிக் டைமிங், குட் விஷன் மாதிரியானவை அடங்கி உள்ளது” என ஹேடன் தெரிவித்துள்ளார். “ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனி போன்ற ஒருவர் இருப்பது எனக்கு நல்ல சப்போர்ட்டாக அமைந்துள்ளது. அவர் சூர்யகுமாரை ஸ்டம்பிங் செய்த விதம் அபாரம்” என ஆட்டத்துக்கு பிறகு நூர் அகமது தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 day ago |
-
இஸ்லாமிய கோர்டுகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
29 Apr 2025புதுடெல்லி, இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை.
-
இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எதிர்பார்ப்பு
29 Apr 2025இஸ்லாமாபாத், இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார
-
அமைதியை மீட்டெடுக்க இந்தியாவுடன் ராஜீய ரீதியில் முயற்சி: நவாஸ் ஷெரீப்
29 Apr 2025லாகூா் : இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ்
-
சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்கு 'புதிய ஆப்'
29 Apr 2025சென்னை : சென்னையில் பெண்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் காவல் ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக்காப்’ என்ற பெயரில் நவீன பாதுகாப்பு சாதனம் அறிமுகம
-
பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்
29 Apr 2025அன்காரா : பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் அனுப்பவில்லை என்று துருக்கி நாடு தெரிவித்தது.
-
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் ஒற்றுமையைக் காட்ட பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்க
-
பஹல்காம் முக்கிய குற்றவாளி மூசா பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்: அதிர்ச்சி தகவல் வெளியீடு
29 Apr 2025ஸ்ரீநகர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று  
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 5-ம் கட்ட கலந்தாய்வு மே 5-ல் நடைபெறும் என அறிவிப்பு
29 Apr 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பதவிகளுக்கான 5வது கட்ட கலந்தாய்வு வரும் மே 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் குழு கூடுகிறது
29 Apr 2025ரோம் : புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ம் தேதி தொடங்கவுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை
29 Apr 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
-
பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1 முதல் கோடை விடுமுறை
29 Apr 2025சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனடா பொதுத்தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி
29 Apr 2025கனடா : கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் தலைவர் தோல்வி அடைந்தார்.
-
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட பிரதமருக்கு கார்கே கடிதம்
29 Apr 2025புதுடில்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
-
சுமோ திரை விமர்சனம்
29 Apr 2025அலைச் சறுக்கு விளையாட்டு வீரரான சிவா, ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, ஒரு நபர் கரை ஒதுங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். உடனே அவரை மீட்டு காப்பாற்றுகிறார்.
-
பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
29 Apr 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு
29 Apr 2025காஞ்சிபுரம் : காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம்
-
தேச பாதுகாப்புக்காக ஒட்டுக் கேட்பதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி
29 Apr 2025புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக தேசவிரோதிகளின் செல்போன்களை கண்காணிப்பதில் எந்த தவறுமே இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நெல்லை: பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
29 Apr 2025நெல்லை : நெல்லையில் பல்வேறு பீடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், நெல்லை டவுனில் பிரபல காஜா பீடி நிறுவனம் உள்ளது.
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா
29 Apr 2025மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று (ஏப். 29) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
-
ஜூன் மாதத்திற்குள் 4 மண்டல மாநாடுகள்: த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்
29 Apr 2025புதுடில்லி : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
-
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரஜினிகாந்த்: புதுமண தம்பதியினரை வாழ்த்தினார்
29 Apr 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு சென்று புதுமண தம்பதியினரை ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
-
இ. க. கட்சியின் கேரள மாநில செயலாளர் துணை முதல்வர் உதயநிதியுடன் சந்திப்பு
29 Apr 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார்.
-
பஹல்காம் சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது: நடிகர் அஜித் கண்டனம்
29 Apr 2025புதுடெல்லி, பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன் என்று பத்மபூஷண் விருது பெற்ற நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.
-
பாரதிதாசன் வரிகளை நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம்: முதல்வர்
29 Apr 2025சென்னை, பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணித்திடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்