முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல்வாதிகளின் மேடை பேச்சுக்கு வழிகாட்டுதல்கள் உருவாக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த அமிர்தபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் பேசும் போது சாதி மத வெறுப்பை தூண்டும் வகையிலும், பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதோடு, சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் எழ வாய்ப்பு உள்ளது. எனவே அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது முறையாக, நாகரீகமாக பேசுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க  நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “சாதி, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து