முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      உலகம்
Pak 2025-04-26

Source: provided

ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் தேசிய கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அதிக சத்தத்துடன் இசையை இசைக்க வைத்தனர். தூதரக மாடியில் நின்று கொண்டு இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் ஆலோசகருமான கர்னல் தைமூர் ரஹத், போராட்டம் நடத்திய இந்தியர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து