முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி

சனிக்கிழமை, 17 மே 2025      உலகம்
Ukrainian 2024-04-13

Source: provided

ரஷ்யா : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். 30 நாட்கள் போர் நிறத்த பரிந்துரையை தயார் செய்தது. அதன்பின் ரஷ்யாவுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் உக்ரைனுடன் மேற்கத்திய நாடுகளான பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் இரு நாடுகளும் 30 நாட்கள் போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் நேற்றுமுன்தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தினர். 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில, 4 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமியின் பிலோபிலியா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பாடத்தை வெளியிட்டு சுமி நிர்வாகம், பொதுமக்கள் வாகனம் மீது வேண்டுமென்று ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது மற்றொரு போர் குற்றம் எனச் சாடியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து