முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2025      இந்தியா
Jaishankar 2023 04 09

Source: provided

புதுடெல்லி : நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அதில், இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

நடப்பு ஆண்டின் மே மாதத்தில், ஜெர்மனியின் புதிய அதிபராக பிரெட்ரிக் மெர்ஸ் பதவியேற்ற நிலையில், மத்திய அமைச்சர்யின் ஜெர்மனி பயணம் அமைந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின் ஒரு பகுதியாக இந்த 3 நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவை வெளிப்படுத்தின. இந்த 3 நாடுகளுடனும் இந்தியா இனிமையான மற்றும் நட்பு முறையிலான உறவை கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து