முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழை: போக்குவரத்து பாதிப்பு

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Bengaluru-Rain -2025-05-19

பெங்களூரு, பெங்களூருவில் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மி.மீ. மழை பெய்துள்ளது. ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் 78.3 மி.மீ. மழையும், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 105.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

 பெங்களூருவின் பல இடங்களில் மே 18 அன்று காலை 8:30 மணி முதல் மே 19 அன்று காலை 7 மணி வரை 100 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.  பெங்களூருவுக்கு மே 23 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையையும், தட்சிண கன்னடம், உடுப்பி, உத்தர கன்னடம், ஹாவேரி, பெலகாவி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது

இந்த மழை காரணமாக ஹோராமாவுவில் உள்ள ஸ்ரீ சாய் லேஅவுட் மற்றும் ரெயின்போ டிரைவ் லேஅவுட் ஆகிய இடங்களில் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்தது. சாய் லேஅவுட்டில் உள்ள வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற மக்கள் போராடி வருகின்றனர், மேலும் ரெயின்போ டிரைவ் லேஅவுட்டில், சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வரை பெங்களூருக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்துள்ளது. இது நகரம் முழுவதும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து