முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Police 2024 08 12

Source: provided

சென்னை : ஐதராபாத்தில் குண்டு சதியை தொடர்ந்து, தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார்  கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குண்டு வைப்பதற்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளான சிராஜ், அமீர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேலும் பலர் இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து