முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: 109 அடியை எட்டும் மேட்டூர் நீர்மட்டம்

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
mettur 2024-12-03

சேலம், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நேற்று (மே.19) நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக உயர்ந்துள்ளது.

கோடை காலம் நீடிக்கும் நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,000 கன அடிக்கு மேல் இருந்தது. இது நேற்று முன்தினம் 4,764 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது.

மேட்டூரில் மட்டும் 55.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனிடையே நேற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் ஒரே நாளில்  100.6 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.52 அடியில் இருந்து, நேற்று (மே.19) 108.82 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 76.32 டிஎம்சியிலிருந்து, இன்று 76.74 டி.எம்.சி யாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களாக தொடரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து