முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
Kandaleru-Dam

Source: provided

ஓசூர் : தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கர்நாடக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிகளி்ல் கடந்த 3 தினங்களுககு முன்பு மழை பெய்ததால், அணைக்கு நீர் வரத்து மேலும் உயர்ந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஓசூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் ஓசூரில் 48 மிமீ, கெலவரப்பள்ளியில் 90 மிமீ, தேன்கனிக்கோட்டை 22 மிமீ,அஞ்செட்டியில் 4.80 மிமீ என மழை பெய்துள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று அணைக்கு நீர் வரத்து 572 கன அடியாக வந்த நிலையில், நேற்று காலை கெலவரப்பள்ளி அணைக்கு 904 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 44.28 அடியாக இருக்கும் நிலையில் , தற்போது 41.98 அடியாக நீர் மட்டம் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின்பாதுகாப்பு கருதி, அந்த அணையில் இருந்து பாசன கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 794.43 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து