முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: நைஜீரியாவில் 57 பேர் பலி

திங்கட்கிழமை, 19 மே 2025      உலகம்
Nigeria 2025-05-19

Source: provided

 அபுஜா : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்  57 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா . இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, அந்நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் பொதுமக்கள் மீதும் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பார்னோ மாகாணம் பஹா பகுதியிலுள்ள மல்லாம் கரமதி, வாடன்ஷிதி கிராமங்களுக்குள் கடந்த வியாழக்கிழமை போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் புகுந்தனர். அங்கிருந்த கிராம மக்களில் 57 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும், 70க்கும் மேற்பட்ட மக்களை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து