எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 12-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (மழையால் ஒரு ஆட்டம் ரத்து) பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் 2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாப் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
மேலும் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே டெல்லி அணியை 2 முறையும் (2019 & 2020), கொல்கத்தா அணியை ஒரு முறையும் (2024) பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.
________________________________________________________________________________________________________
சுப்மன் கில் அதிவேக 5,000 ரன்கள்
ஐ.பி.எல். தொடரின் 60-வது லீக் ஆட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவரில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்னும், சுப்மன் கில் 93 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 9வது வெற்றியைப் பதிவு செய்த குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த 2வது இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்து உள்ளார். 143 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கே.எல்.ராகுல் முதல் இடத்தில உள்ளார். சுப்மன் கில் 154 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.
________________________________________________________________________________________________________
கே.எல்.ராகுல் மாபெரும் சாதனை
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் நடந்த 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 112 ரன்களுடனும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக கே.எல். ராகுல் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிக்காக விளையாடிய போதும் ஐ.பி.எல். தொடரில் சதம் அடித்துள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளுக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை ராகுல் படைத்துள்ளார். இந்த ஆட்டத்தில் டெல்லி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 108 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 93 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
________________________________________________________________________________________________________
ஜூனியர் கால்பந்து: இந்தியா சாம்பியன்
7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - நடப்பு சாம்பியன் வங்காளதேசம் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
________________________________________________________________________________________________________
பிளேஆப் சுற்றில் பஞ்சாப் அணி
டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதன்மூலம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆபிற்கு பஞ்சாப் சென்றுள்ளது. 11 ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளேஆப் சுற்றுக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. பிளே ஆப் சுற்றில் 4வது அணியாக இடம்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மும்முரமாக உள்ளன.
________________________________________________________________________________________________________
சுப்மன் கில் குறித்து ரவிசாஸ்திரி
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்துள்ளார். இதனால் அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பும்ராவின் பணிச் சுமையை கருத்தில் கொண்டு சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப் படலாம் எனத் தெரிகிறது. ஆனால் சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் "சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என பேசுவார்கள். வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என்பது அடிக்கடி வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில நேரம் அவ்வாறு சொல்பவர்களிடம், நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள், எவ்வாறு விளையாடினீர்கள் என்று பாருங்கள் என்று சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
15 Jun 2025டெல்அவீவ் : இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
15 Jun 2025சென்னை : கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
நவீன தமிழ்நாட்டை செதுக்கியவர்: தந்தையர் தினத்தில் கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
-
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jun 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதா பாக்.,? - டசால்ட் நிறுவனம் மறுப்பு
15 Jun 2025பாரிஸ் : ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு
15 Jun 2025சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கிய ஹவுதி படை
15 Jun 2025தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
-
4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: பழங்குடியின மாணவிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய்
15 Jun 2025சென்னை : த.வெ.க.
-
வெடி விபத்து மற்றும் நீரில் மூழ்கி பலியான பெண் மற்றும் பள்ளி மாணவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
15 Jun 2025சென்னை : கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலிான பெண் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு நிதிய
-
ஈரானில் ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடேன வெளியேற இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
15 Jun 2025டெஹ்ரான் : ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
15 Jun 2025ஆண்டிப்பட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
-
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய போர் விமானம்..!
15 Jun 2025திருவனந்தபுரம் : பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.
-
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம்: இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தீவிர மோதல்
15 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தொடர்ந்த தீவிர மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி
15 Jun 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக நேற்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் சென்றார்.
-
பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? - அமெரிக்கா வெள்ளை மாளிகை மறுப்பு
15 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி-320 பேர் படுகாயம்
15 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா.
-
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி
15 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்குதல்
15 Jun 2025லண்டன் : இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய ராசிபலன்
15 Jun 2025 -
இன்றைய நாள் எப்படி?
15 Jun 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
15 Jun 2025- திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் விடாயாற்று உற்சவம்.
- சோழவந்தா ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- கீழ்திருப்பதி கோவ