முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடகையை செலுத்த ‘கியூ ஆர்’ கோடு: மதுரை மாநகராட்சியில் புதிய நடைமுறை

திங்கட்கிழமை, 19 மே 2025      தமிழகம்
QR-line 2023-12-05

Source: provided

மதுரை :  மாநகராட்சி கடைகளுடைய வாடகையை அதன் உரிமையாளர்கள் நிலுவையில்லாமல் உடனுக்குடன் எளிமையாக செலுத்தும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் கடைகள் முன் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

100 வார்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 3,378 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடைகளை கால நீட்டிப்பு செய்வதற்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை மாநகராட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில், இந்த கடைகளை முறையாக புதுப்பித்துக் கொள்ள கடை உரிமையாளர்களும் ஆர்வம் காட்டாததோடு, மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடைகளுக்கான வாடகையையும் உரிமையாளர்கள் முறையாக செலுத்தாததால் மாநகராட்சிக்கு கடைகள் மூலம் கிடைக்கும் வரியில்லா வருவாய் பாதிக்கப்பட்டது.  

இந்நிலையில் தற்போது ஆணையாளர் சித்ரா,   மாத வாடகையை, மாநகராட்சி கடை உரிமையாளர்கள் நிலுவை வைக்காமல் அந்தந்த மாதங்களிலே எளிமையாக செலுத்துவதற்கு வசதியாக கடைகள் முன் மாநகராட்சி சார்பில் ‘கியூ ஆர்’ கோடு ஓட்டி வாடகை வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால், இனி பில் கலெக்டர்கள், கடை உரிமையாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி வசூல் செய்ய வேண்டாம் என்றும், கடை உரிமையாளர்களே, கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து மாத வாடகை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து