முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்காட்டில் 48வது கோடை விழா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
Arkad

Source: provided

ஏற்காடு: ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை அமைச்சர்கள்  தொடங்கி வைத்தனர். 

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  நடப்பாண்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை அமைச்சர்கள்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  ராஜகண்ணப்பன்,  ராஜேந்திரன் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, மலையரசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் 1½ லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அண்ணா பூங்கா வளாகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளை கொண்ட மலர் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து