முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்தின் போது நடந்தது என்ன? டி.ஜி.சி.ஏ., விளக்கம்

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-3

புதுடில்லி, ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்து உள்ளது.

ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக டி.ஜி.சி.ஏ. எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் பி787 விமானம் கிளம்பிய உடனே நொறுங்கி விழுந்தது. இதில் 12 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.

இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு (ஏ.டி.சி.) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏ.டி.சி. முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்க வில்லை. ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்படுகிறது. இவ்வாறு டி.ஜி.சி.ஏ. விளக்கம் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து