முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? அமைச்சர் பெரியசாமி

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      தமிழகம்
Periyasamy 2023-09-02

திண்டுக்கல், தி.மு.க. கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்  அத்தனையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம்  கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை பார்த்து வருகிறார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள்.  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100 சதவீதம் வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வருகின்றனர்.   ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.

 இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து