முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      தமிழகம்
Weather-Center 1

கோவை, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு  தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்

வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கடக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால்  கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 16-ந் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து இந்த 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு  தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர். 

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மழை, வெள்ளத்தின் போது மக்களை காக்க வேண்டிய உபகரணங்கள், படகு, கயிறு மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கான ராட்சத கருவிகள் உள்பட பல்வேறு உபரகணங்களையும் எடுத்து கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு செல்ல உள்ளனர். அங்கு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, மழை வெள்ளத்தின்போது மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து