முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ஆண்டு 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதிகளை அறிவித்தது மத்திய அரசு

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2027 மார்ச் 1-ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது.

2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று (ஜூன் 16, 2025) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2027 மார்ச் 1-ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026 அக்டோபர் 1ம் தேதி கணக்கெடுப்பு பணி தொடங்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள்,1.3 லட்சம் அதிகாரிகள் அதிநவீன மொபைல் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி இந்த பணியை மேற்கொள்வார்கள். அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1931-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்பு தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், பதிவாளர் ஜெனரல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஒவ்வொரு வீட்டின் நிலை, சொத்துக்கள் மற்றும் வசதிகள் தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு ஒரு கட்டமாகவும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் தொடர்பான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு கட்டமாகவும் நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி கணக்கெடுப்பும் பதிவு செய்யப்படும்.

இதற்கு முன் 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இம்முறை மக்கள்தொகை கணக்கெடுப்போடு, சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. இது 16 வது கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்படும் எட்டாவது கணக்கெடுப்பு இது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிக கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து