முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
TN 2025-06-16

Source: provided

சென்னை : தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சுரேந்தருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி கே.சுரேந்தரை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், 2022 ஆம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சுரேந்தர் 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளார் என்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகள், சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீதிபதி சுரேந்தர் பணியாற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிபதி சுரேந்தரை வரவேற்றுப் பேசினர். ஏற்புரையாற்றிய நீதிபதி சுரேந்தர், அரசியல் சாசனத்திற்கும், நீதித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும், இடமாற்றம் என்பது புதிய துவக்கம் என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சுரேந்தருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து