முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரம்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      உலகம்
Iran 2025-06-16

Source: provided

தெஹ்ரான் : ஈரானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டுக்குளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.  

இது குறித்து தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “இங்குள்ள பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சில மாணவர்கள் ஈரானுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். பிற சாத்தியமான விருப்பங்களும் பரிசீலனையில் உள்ளன. அவ்வப்போது புதிய தகவல்களை பகிரப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் தற்போது 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பாதி பேர் மாணவர்கள். ஈரானில் உள்ள பெரும்பாலான இந்திய மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்கள் மருத்துவம் மற்றும் பிற தொழில் முறை படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குறைந்த செலவு மற்றும் ஒத்த கலாச்சார சூழல் காரணமாக காஷ்மீர் மாணவர்கள் பொதுவாக ஈரானிய பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்கிறார்கள். தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் கோம் போன்ற நகரங்களில் இந்திய மாணவர்கள் பரவியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், ஈரானில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள பிரத்யேக டெலிகிராம் குழுவில் சேருமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல, ஈரானில் உள்ள இந்தியர்கள், தூதரகத்தை தொடர்புகொள்ள அவசர உதவி எண்கள் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து