முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் அனைத்து துறைகள் ஆய்வு கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
DCM 2025-06-16

Source: provided

தேனி : தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.

தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை அனைத்து துறை சார்பிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி, ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், அரசு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் ஷஜீவனா, எம்பி தங்க தமிழ்ச்செல்வன், கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்.எல்.ஏ. க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்பு ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் ஒன்பது புதிய வழித்தடத்தில் புதிய மினி பேருந்துகளை இயக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவல வளாகத்தில் உள்ள தேனி மக்களவைத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்பு மாலையில் தேனி அருகே மதுராபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கலந்துரையாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து