முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
Bhavanisagar-Dam 2023 08 19

Source: provided

மேட்டுப்பாளையம் : கோவை, திருப்பூருக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை அமைந்துள்ளது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிக்கப்படுவது வழக்கம். அதன் பின் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் நான்கு மதகுகள் மற்றும் பவானி ஆற்றில் திறந்து விடுவர்.

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் இரவு பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 82.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. இரவு, 11 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு 2:30 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் அப்படியே நான்கு மதங்கள் வழியாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக தலா, 2 ஆயிரம் கன அடியும், மின்சாரம் உற்பத்தி செய்ய, 6 ஆயிரம் கன அடியும் தண்ணீரும் என மொத்தம் 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து