முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      இந்தியா
Air

Source: provided

பெர்லின் : ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜெர்மனியின் பிராங்க்புர்ட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட 'லுப்தான்சா' நிறுவனத்தின் 'போயிங் 787-9 டிரீம்லைனர்' ரக விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் பிராங்க்புர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

பின்னர் விமானம் முழுவதையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் ஆபத்தான பொருள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பயணிகளை மீண்டும் ஏற்றிக்கொண்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதாக விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நேற்றுக நண்பகல் 1.20 மணிக்கு ஐதராபாத் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து