எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தி.மு.க.வில் 30 சதவீதம் கூடுதல் உறுப்பினர் சேர்க்கும் பணியை வருகிற 25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 40 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
தி.மு.க.வில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்திருந்த அந்த தீர்மானத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதாவது ஒரு திட்டத்தில் பயனாளியாக இருப்பதால் அனைத்து குடும்பங்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்காக அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒரு விண்ணப்பத்தில் 25 நபர்களை சேர்க்கும் வகையில் விவரங்கள் இடம் பெற்றுள்ளது. உறுப்பினர் சேர்க்கையை 20-ம் தேதி (இன்று) தொடங்குவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏனோதானோ என்று இதை செயல்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பல்வேறு தகவல்கள் அடங்கிய புதிய செயலியை தி.மு.க. தலைமை உருவாக்கி உள்ளது.
இந்த செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவதற்காக ஐ.டி. விங்க் நிர்வாகிகள் மாவட் டத்துக்கு ஒருவர் வீதம் 234 பேர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் இன்று பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையானது தலைமைக் கழகத்தில் இருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வழியாக நடைபெறும். அதே சமயத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்காக பிரத்யேகமாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. படிவத்தில் நிரப்பப்படும் அதே விவரங்கள் செயலியிலும் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.
இன்று தொடங்க இருக்கும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் முதற்கட்டமாக செயலியைப் பயன்படுத்தும் முறை குறித்து தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்த 234 பேருக்கு தலைமைக்கழகத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற 234 பேரும், தலா ஒரு தொகுதியில், மாவட்டச் செயலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்கு (30 வயதுக்குட்பட்ட, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்) பயிற்சி அளிப்பர்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தொகுதியிலேயே மாவட்டச் செயலாளர்கள் வருகிற 22-ம் தேதி மற்றும் 23-ம் தேதி செய்து தரக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சிக்கு முறையான இணைய வசதி, எல்.இ.டி. இருப்பது அவசியம். பயிற்சிக் கூட்டத்தில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் மட்டுமின்றி பி.எல்.ஏ.2-க்களும் கலந்து கொள்வதை உறுதி செய்திட வேண்டும்.
செயலியில் உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் வழியாகவே கழகத்தலைவர், தலைமைக்கழகத்திற்கு எந்தத் தொகுதியில், எந்த வாக்குச்சாவடியில், எவ்வளவு உறுப்பினர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தினசரி தெரிய வரும் என்பதால் இச்செயல் பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் பயிற்சிக் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ம் தேதி படிவத்தில் நிரப்பி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைப்பார். அதன் பிறகு அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிட வேண்டும்.
மாவட்டச் செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் பட்டியலை தலைமைக் கழகத்தில் இருந்து சரிபார்க்கும்போது பல தொகுதிகளில் சுமார் 30 சதவீதம் பேர் வரைக்கும் தகுதியானவர்களாக இல்லை. எனவே, அத்தகைய வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கை விவரங்களை செயலியில் உள்ளீடு செய்வதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள், புதிய உறுப்பினர்கள் என அனைவரையும் உறுப்பினராக இணைத்து ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 30 சதவீத உறுப்பினர் சேர்க்கை என்பதை உறுதி செய்திட வேண்டும். உறுப்பினர் படிவத்தில் வாக்குச்சாவடி எண்ணைக் கட்டாயம் குறிப்பிடவும், ஏற்கனவே உறுப்பினர் எனில் அதனையும் குறிப்பிடவும். தேர்தல் சமயத்தில் ஒரு குறிப்பேட்டில் குடும்பங்கள் பிரித்து, அக்குடும்பத்தின் அரசியல் நிலைப்பாட்டை எழுதிக் கொள்வதைப் போல இப்பொழுதே குறித்து வைத்துக் கொண்டால் தேர்தல் சமயத்தில் இன்னொரு முறை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
கழகத்தலைவர் அறிவித்துள்ளபடி உறுப்பினர் சேர்க்கையை தேர்தல் பரப்புரையாக மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஒவ்வொரு இல்லத்திலும் தலா 5 முதல் 10 நிமிட நேரத்தை உறுப்பினர் சேர்க்கைக் குழுவினர் செலவிட வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக் குழுவில் மகளிர், இளைஞர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஜூலை இறுதிவரை, அதாவது நாற்பது நாட்கள் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்பதால் தினசரி 10 முதல் 15 வீடு களில் உறுப்பினர் சேர்க்கையை நிகழ்த்தலாம். உறுப்பினர் சேர்க்கையின் இறுதியில் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு முறையேனும் சென்று வந்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
நிர்வாகிகள், சார்பு அணியினர் என அனைவரும் அவரவர் வாக்குச்சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கையில் கலந்து கொள்ள வேண்டும். நிழற்படங்களை ஓரணியில் தமிழ்நாடு என்ற உடன் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கான வீடுகளின் கதவுகளில் வாகனத்தின் பின்புறம் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்கள், பாக்கெட் காலண்டர்கள், சிறு புத்தகம் ஆகியவை இன்று இரவு முதல் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வீடு வீடாக விநியோகம் செய்வதையும், ஒட்டுவதையும் மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ஏதேனும் சந்தேகமிருப்பின் தலைமைக்கழகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரத்து: அமெரிக்க தூதரம் கடும் எச்சரிக்கை
17 Jul 2025அமெரிக்கா: குற்றச்செயலில் ஈடுபட்டால் விசா ரதது செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.