முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் முன்னணி பல்கலை., பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி.க்கு 180-வது இடம்: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      இந்தியா
IIT 2023 03 14

புதுடில்லி, உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில்  இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.  சென்னை ஐ.ஐ.டி., 180-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூ.எஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, 2026ம் ஆண்டிற்கான உலக பல்கலை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 500 பல்கலைக்கழகம் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் மாசூசுட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,), இம்பீரியல் கல்லுாரி, பிரிட்டன், ஸ்டேன்போர்டு பல்கலை, அமெரிக்கா, ஆக்ஸ்போர்டு பல்கலை, பிரிட்டன் , ஹார்வார்டு பல்கலை, அமெரிக்கா முறையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. ஐ.ஐ.டி., டில்லி- 123வது இடமும், ஐ.ஐ.டி., பாம்பே- 129வது இடமும், ஐ.ஐ.டி., மெட்ராஸ்- 180வது இடமும்,  ஐ.ஐ.டி., கரக்பூர்- 215வது இடமும், ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர்- 219வது இடமும் பிடித்துள்ளன.

இது குறித்து  பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: வரும் காலங்களில் அதிகமான இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் உலக அளவில் சிறந்த சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களின் நலனுக்காக, ஆராய்ச்சி மற்றும் புதுமை படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து