முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Ma Subramani

செங்கல்பட்டு, கொரோனா தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; "செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். நூறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது இந்த கல்லூரியின் சிறப்பு தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வருகின்றேன். கடந்த நான்கு ஆண்டுகளில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

கொரோனோ தொற்றை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தேவையில்லை. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை."

இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து