எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. தொடர்ந்து பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களை இந்திய விமானப் படை குறிவைத்து தாக்கி கடும் சேதத்தை விளைவித்தது. இதன் காரணமாக, வேறு வழியின்றி போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பின் பேரில், இந்தியா தனது ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்த போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரிமை கோரினார்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர், "துரதிர்ஷ்டவசமாக, இந்தியா மீண்டும் அதிகாலை 2.30 மணிக்கு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் நூர் கான் விமானப் படை தளத்தையும், ஷோர்கோட் விமான தளத்தையும் தாக்கினர். அப்போது சவுதி இளவரசர் பைசல் என்னை அழைத்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேசி தாக்குதலை நிறுத்த உதவுவதாக கூறினார். இதையடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான ராணுவ வளாகங்களில் ஒன்று நூர் கான் விமானப் படை தளம். இதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷோர்கோட் விமானப்படை தளமும் அந்நாட்டுக்கு மிகவும் முக்கிய தளமாக உள்ளது. இவ்விரு விமானப்படைத் தளங்கள் மீதும் இந்தியா நடத்திய தாக்குதலே பாகிஸ்தான் பணிய காரணமாக இருந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


