எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் ரூ.36.18 கோடியில் கல்விசார் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர், திருச்சி...
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 36 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடம், துணை வேந்தர், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
தீவிரமான கவனம்...
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாக பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலிடம்...
மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
மானியக் கோரிக்கை....
ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, 2025-26-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாடு முதல்வரால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
முதல்வர் அறிவிப்பு...
அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர்கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வரால் 30.5.2025 அன்று அறிவிக்கப்பட்டது.
1,120 மாணவர்கள்....
அதன்படி தமிழ்நாடு முதல்வரால் நேற்று 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்.முதல்வரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
புதிய குடியிருப்புகள்....
மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடம், 2 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரில்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
2030-ல் டி.டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும்: தமிழ்நாடு அரசு தகவல்
05 Mar 2026சென்னை, 2030-ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வருகிற 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
இணையதளத்தில் கோவில் நில விவரங்களை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
05 Mar 2026மதுரை, கோவில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இடைக்காட்டூர் கிராமத்தில் தாக்குதல் சம்பவம்: கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
05 Mar 2026சென்னை, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மா
-
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள்ளே எப்படியாவது மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026தஞ்சாவூா், இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க அ
-
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை
05 Mar 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை: ரஷ்ய அறிவிப்பு
05 Mar 2026மாஸ்கோ, ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு: எல்லாம் முடிந்துவிட்டதாக சைகை காட்டியது எதனால்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
05 Mar 2026தஞ்சை, தஞ்சையில் நடந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பேசினார்.
-
மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நிறைவு: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
05 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடையும் 6 மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
-
தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந் தெரிவித்துள்ளார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆஃபர் கொடுத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026சென்னை, 2021 தேர்தலில், தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க.
-
தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
-
மாநிலங்களவை தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா - கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
05 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க.
-
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்கள் பட்டியல் : 2 வாரங்களில் வெளியிட திட்டம்
05 Mar 2026சென்னை, த.வெ.க. சார்பில் இரணடு வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் : அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
05 Mar 2026நியூயார்க், பல்வேறு நாடுகளிடம் இருந்து வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்
-
போர் சூழல் எதிரொலி: மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்
05 Mar 2026புதுடெல்லி, போர் சூழல் காரணமாக ரஷ்யாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்: முதல்வர்
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்
-
பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல்: பிரதமர் மோடி தகவல்
05 Mar 2026டெல்லி, பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்க படைகள் பயன்படுத்தியதா..? வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு
05 Mar 2026வாஷிங்டன், ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தியதாக வந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் பலி 1,045 ஆக உயர்வு
05 Mar 2026தெஹ்ரான், ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளை எட்டியது.
-
ஈரானின் உச்சத்தலைவர் கமேனி மறைவிற்கு இந்தியா இரங்கல்
05 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் மறைவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க.வில் இணையுமாறு ஜெயக்குமாருக்கு செங்கோட்டையன் அழைப்பு
05 Mar 2026ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய நாள் எப்படி?
05 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Mar 2026- ஆழ்வார் திருநகரியில் ரதம்
- கோவை கோணியம்மன் தெப்பம்.
- திருவாரூர் தியாகராஜர் விழா தொடக்கம்.
- வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
- காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.


