Idhayam Matrimony

போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து இந்தியர்கள் 1000 பேரை அழைத்து வர ஏற்பாடு

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      இந்தியா
Iran-Indian-students-2025-0

Source: provided

புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், ஈரான் நாட்டிலிருந்து தனது நாட்டினரை பாதுகாப்பாக அழைத்துவர இந்திய அரசு ஆபரேஷன் சிந்துவை தொடங்கியுள்ளது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் தனது வான்வெளியை திறந்துள்ளது. இதனையடுத்து ஆபரேஷன் சிந்து திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரானில் இருந்து மஹான் ஏர் நிறுவனத்தின் தனி விமானங்கள் மூலம் சுமார் 1000 இந்திய மாணவர்கள் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.

இதனையடுத்து ஈரானின் மஷாத்தில் இருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றி வந்த முதல் விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இரவு 11.40 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியது. அஷ்காபத்தில் இருந்து இந்திய மாணவர்களை ஏற்றி வரும் இரண்டாவது விமானம் நேற்று (சனிக்கிழமை) காலை சுமார் 10 மணியளவில் தரையிறங்கியது. மூன்றாவது விமானம் நேற்று மாலை டெல்லியில் தரையிறங்கியது.

முன்னதாக இந்த நடவடிக்கை குறித்து பேசிய ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் முகமது ஜவாத் ஹொசைனி, “நாங்கள் இந்தியர்களை எங்கள் சொந்த மக்களாகக் கருதுகிறோம். ஈரானின் வான்வெளி மூடப்பட்டுள்ளது, ஆனாலும் இந்தப் பிரச்சினை காரணமாக, இந்திய நாட்டினரின் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரான் வான்வெளியை திறக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முதல் விமானம் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும், சனிக்கிழமை மேலும் இரண்டு விமானங்கள் தரையிறங்கும்.” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து