முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் 517 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் உள்ள வெளிநாட்டவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் ஈரானில் இருந்து ஒரு தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் (ஜூன் 20) புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்தில் இருந்து நேற்று (ஜூன் 21) அதிகாலை 3 மணிக்கு சிறப்பு விமானம் இந்தியர்கள் புதுடெல்லி அழைத்துவரப்பட்டனர். இதன் மூலம், இதுவரை 517 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் உள்ள நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்களை வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம், அந்த நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் உள்ள நேபாளம் மற்றம் இலங்கை நாட்டவர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து, தொலைபேசி எண்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து