எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வால்பாறை : வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
6 வயது சிறுமியை தாய் கண்முன்னே சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் ட்ரோன் உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் காவல் துறையினரும் வனத்துறையினரும் ஈடுபட்டு வந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று காலை, சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றதில், சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணோஜ்முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோஷினியை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தூக்கிச் சென்றது.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சப்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஓடி வந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து தேடும் பணியில் இரவு முதல் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நேற்று காலை வனத் துறை மற்றும் காவல் துறையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும்பணியை தீவிரப்படுத்தி தேடி வந்தனர். இந்நிலையில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள யூகலிப்டஸ் அடர்ந்த காடுகள் பகுதிக்கு சிறுமியை கவ்வி கொண்டு சென்ற சிறுத்தை, அங்கு குழந்தையின் உடலை தின்றுள்ளது. பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்த சிறுமியின் உடல் பாகங்களை மீட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் தாய் நான்கு வயது என்று கூறிய நிலையில் குழந்தையின் வயது ஏழு என்பது ஆதார் கார்டு மூலம் தற்பொழுது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குழந்தையை சிறுத்தை தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


