எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம் தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக கொடுக்கின்றார்கள் என்று தான் அமித்ஷா கூறி இருக்கிறார். யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாரத பிரதமர் முன்னின்று நடத்துகிறார் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்: தமிழக அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பொதுவெளியில் ஆபாசமாக பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இதற்கு, ''நாங்கள் ஏற்கனவே இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். தி.மு.க., ஆட்சியை பொருத்தவரைக்கும், இன்று மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிச்சயம் இதற்கான பதில் கிடைக்கும். மக்கள் இதற்கான தக்க தண்டனை வழங்குவார்கள்'' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


