முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

லண்டன் : தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

ஜெய்ஸ்வால் சதம்...

இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை படைத்தார்.

161 ரன்கள் குவித்த....

இதன்மூலம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் போட்டியில் 101 ரன்கள் குவித்து இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து