முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குபேரா திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      சினிமா
Kubera-Review 2025-06-23

Source: provided

அரசின் ஒரு திட்டத்தை அபகரிக்க நினைக்கும் தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு லஞ்சமாக கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சிக்கிறார். அதற்காக பிச்சைக்காரர்கள் பெயரில் நிறுவனம் தொடங்கி, பண பறிமாற்றத்தை முடித்துக்கொண்டு அவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார். இந்த மாய வலையில் தணுஷும் சிக்குகிறார். எதுவும் அறியாத அப்பாவி தனுஷ், இந்த கொடும் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே குபேரா படக்கதை. பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார் தணுஷ்.. நாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா யதார்த்த நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். சிபிஐ அதிகாரி வேடத்தில் வரும் நாகர்ஜுனா மற்றும் வில்லனாக மிரட்டும் ஜிம் சர்ப் இருவரின் நடிப்பையும் நிச்சயம் பாராட்டலாம். மேலும், சுனைனா, ஜெயப்பிரகாஷ், சாயாஜி ஷிண்டே, பாக்யராஜ் உள்ளிட்ட அனைவரும் அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சேகர் கம்முல்லா, தொழிலதிபர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் இடையே நடக்கும் பேரத்தின் பின்னணியை பல ஆச்சரியமான விசயங்கள் மூலம் நம்மை வியக்க வைக்கிறார். அதே நேரம், திரைக்கதையில் உள்ள சில தடுமாற்றத்தை தவிர்த்திருந்தால் படம் வெற்றிப்படமாகியிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து