முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முறைகேடு புகாரில் வங்கதேச முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கைது

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      உலகம்
Jail-1

Source: provided

டாக்கா : வங்கதேசத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா தனது பதவிக் காலத்தில் வாக்கெடுப்புகளில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு செருப்பால் அடித்து வெளியே இழுத்து வந்தனர்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா உள்பட 18 பேர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தொடர்ந்த வழக்கில் நூருல் ஹுடா கைது செய்யப்பட்டதாக டாக்கா பெருநகர காவல் துறையின் துணை ஆணையர் மொஹிதுல் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) தெரிவித்தார்.

முன்னதாக, நூருல் ஹுடா வீட்டுக்குச் சென்ற வங்கதேச தேசிய கட்சியினர், அவருக்கு செருப்பு மாலை போட்டு, செருப்பால் அடித்து, வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வன்முறை கும்பலிடம் இருந்து அவரை மீட்டு தங்கள் காவலில் எடுத்துள்ளனர். டாக்காவின் உத்தரா மேற்கு காவல் நிலைய எல்லைக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த உத்தரா மேற்கு காவல் நிலையத் தலைவர் ஹபிசுர் ரஹ்மான், "ஒரு கும்பல் ஹுடாவைச் சுற்றி வளைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அவரை எங்கள் காவலில் எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து