எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், டி.எம்.சி. ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகளின்படி, குஜராத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பா.ஜ.க.வும், ஆம் ஆத்மி கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத்தின் காடி தனித்தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குமார் 99,742 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 39,452 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 60,290 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பாய் சாவ்தா இரண்டாம் இடத்தையும், 3090 வாக்குளைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியின் சாவ்தா ஜகதீஷ்பாய் கன்பத்பாய் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
குஜராத்தின் மற்றொரு தொகுதியான விசாவதாரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் கிரித் படேல், 58,388 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ரன்பாரியா 5501 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள பா.ஜ.க. வேட்பாளர் ஜீவன் குப்தா 20,323 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் அர்யாதன் சவுகத் 77,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஸ்வராஜைவிட 11,077 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஸ்வராஜ் 66,660 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 8,648 வாக்குகளுடன் 4-ம் இடம் பிடித்துள்ளார். அன்வர் என்ற சுயேட்சை வேட்பாளர் 19,760 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் இடைத்தேர்தலில் டி.எம்.சி வேட்பாளர் அலிஃபா அகமது 1,02,759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 50,049 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் 52,710 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கபில் உத்தின் ஷேக் 28,348 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


