எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து ஜோடியான லாயிட் கிளாஸ்பூல் - ஜூலியன் கேஷ், ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) - டேவிட் பெல் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஜோடி 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
_______________________________________________________________________________________________________
செஸ்: வைஷாலி வெற்றி
பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடர் 6 சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டியை கொண்டது.
இதில் இந்திய வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த வைஷாலி நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீராங்கனை மைலி-ஜேட் ஓவெலெட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் வைஷாலி 2-0 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனையான வந்திகா அகர்வால் முன்னாள் உலக சாம்பியனான உக்ரைனின் அன்னா உஷேனினாவை தோற்கடித்தார்.
_______________________________________________________________________________________________________
கபில் சாதனை முறியடிப்பு
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
_______________________________________________________________________________________________________
ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் பிங்க் பந்து டெஸ்ட் இன்று (ஜூலை 13) இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இந்தப் போட்டியில் ’பிங்க் பந்து ஸ்பெஷலிஸ்ட்’ எனப்படும் ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாதன் லயனுக்கு மாற்றாக இந்த முடிவு எடுக்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எல்லாமே ஒரு ஆப்ஷன்தான். இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குறிப்பாக பிங்க் பந்து கிரிக்கெட்டில் நாங்கள் என்ன சிறப்பானது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். 2 சீசன்கள் இங்கு பிங்க் பந்தில் விளையாடினோம். இன்னும் இந்த பிட்ச் குறித்து சரியாக கணிக்க முடியவில்லை. அதனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பிறகு அணியை அறிவிப்போம் என்றார். பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸி. அணி 12-இல் 11 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
_______________________________________________________________________________________________________
நேபாள வீரர்களுக்கு பயிற்சி
இந்திய தூதரின், நேபாள இளைஞர்களுக்கான கிரிக்கெட் பெல்லோஷிப் திட்டத்தின் அடிப்படையில், நேபாளத்தின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் இந்தியத் தூதரகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேபாளத்துக்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, அந்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் நரேன் பட்டா, சாஹில் படேல் மற்றும் பூஜா மஹாத்தோ ஆகியோரை நேற்று (ஜூலை 11) நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில், நேபாள கிரிக்கெட் ஆணையத்தின் தலைவர் சாதூர் பஹதூர் சந்தாவும் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து, அந்த விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் போபாலின் எல்.பி. சாஸ்திரி கிரிக்கெட் பயிற்சி மையத்தில், வரும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, வெளியான அறிக்கையில், இந்தியத் தூதரகத்தின் இந்த முயற்சி, நேபாளத்தின் இளம் கிரிக்கெட் திறமைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதாகவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான பகிரப்பட்ட கிரிக்கெட் ஆர்வத்தின் மூலம், உறவுகளை வலுப்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
_______________________________________________________________________________________________________
ஆர்ச்சர் குறித்து ரூட் மகிழ்ச்சி
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் குவித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என ஜோ ரூட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிட்ச் சவாலாக இருந்ததாலேயே நாங்கள் மெதுவாக பேட்டிங் செய்தோம். அது மிகவும் மெதுவாக இருப்பதால் ரன்கள் அடிப்பது கடினம். சதத்தை அடிப்பதற்காக காத்திருந்ததும், சதம் அடித்த பின் உடனடியாக அவுட்டானதும் விரக்தியைக் கொடுத்தது. அங்கிருந்து பெரிய ரன்கள் குவிக்காதது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப்படி சதங்கள் அடித்து சாதனைப் பட்டியலில் மேலே நகர்வதற்காகவே உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
_______________________________________________________________________________________________________
டி20 உலககோப்பையில் 'இத்தாலி'
2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இம்முறை, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. உலகம் முழுவதும், இதற்கான தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா பகுதி, ஆப்ரிக்கா பகுதி, ஆசியா பகுதி, ஐரோப்பா பகுதி போன்ற பல பகுதிகளிலும் தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஐரோப்பா பகுதி தகுதிச்சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.
ஐரோப்பா பகுதி தகுதிச்சுற்றில், நெதர்லாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற அணியாக, ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது. எஞ்சி இருந்த ஒரு இடத்திற்கு இத்தாலி மற்றும் ஜெர்ஸி ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்த நிலையில், இறுதியில் இருவரும் தலா 5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தார்கள். ஆனால், ஜெர்ஸி அணியின் நெட் ரன்ரேட் +0.0306 ஆக இருந்த நிலையில், இத்தாலி நெட் ரன்ரேட் +0.612 ஆக இருந்தது. இதனால், இத்தாலி அணி தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
_______________________________________________________________________________________________________
தொடரை தவறவிடும் கம்மின்ஸ்..?
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருட இறுதியில் ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு கம்மின்ஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
_______________________________________________________________________________________________________
வீராங்கனைக்கு ரூ.35 கோடி பரிசு
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா) மோதினர். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.35 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
_______________________________________________________________________________________________________
பந்து வீச மாட்டேன்: ஸ்டார்க்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே ஹெட்டிங்லே (லீட்ஸ்), பர்மிங்காம் (எட்ஜ்பாஸ்டன்) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த இரண்டு மைதானங்களில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான ஆடுகளங்கள் முற்றிலும் நெடுஞ்சாலை போன்று இருந்தது. இதில் சுப்மன் கில்லிற்கு பந்து வீசமாட்டேன் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இங்கிலாந்தில் நான் சுப்மன் கில்லுக்கு பந்து வீச மாட்டேன். இது உறுதி. இந்தியா- இங்கிலாந்து போட்டியை அதிக அளவில் பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டு பார்த்தேன். லபுசேன், அலேக்ஸ் கேரி, ஸ்மித் போன்றோர் காலையில் எழுந்து (வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடியது), காஃபி மெஷின் அருகே அமர்ந்து போட்டியை பார்த்தனர். நான் ஸ்கோர் மட்டும் பார்த்தேன். இங்கிலாந்தில் இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச விரும்புவார்கள்? இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.