முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி போட்டியில் இங்கி. வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

லண்டன்: கடைசி போட்டியில் தோல்வியடைந்த போதும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது. 

3-1 என முன்னிலை...

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

ஷபாலி வர்மா அதிரடி...

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 75 ரன்னில் அவுட்டானார். இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 3 விக்கெட்டும், சோபி எக்கல்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

திரில் வெற்றி... 

முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், சோபியா டங்க்ளே 46 ரன்னில் அவுட்டானார். டேனில் வியாட் ஹாட்ஜ் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். பவுசியர் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். டாமி பியூமாண்ட் 30 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஆனாலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றி அசத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து