முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      இந்தியா
Rangaswamy 2024 08 08

Source: provided

புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

ரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியது: ”காமராஜர் ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார்.

கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியை செலவிடுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர். பிற படிப்புகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.  

நல்ல நூல்களை படித்தால் நல்ல சிந்தனையாளராக வர முடியும். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும். எனவே பிள்ளைகள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக படித்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து