முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு

புதன்கிழமை, 16 ஜூலை 2025      உலகம்
Sukhla-2025-07-16

வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய  இந்தியர்களுக்கு நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சுபான்ஷு சுக்லா மட்டும் 7 ஆய்வுகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 18 நாட்கள் தங்கியிருந்தனர். தங்களது பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4.40 மணிக்கு விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் 4 பேரும் புறப்பட்டனர். விண்கலம் பூமியை நெருங்கும்போது பாராசூட்டுகள் 2 நிலைகளில் பயன்படுத்தப்பட்டன. 

விண்கலம் கடலில் இறங்கியதும், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அமெரிக்கா கடற்படையினர் விண்கலத்தை மீட்டு, அங்கிருந்த மீட்பு கப்பலில் ஏற்றினர். பின்னர் விண்கலத்தின் கதவுகள் மாலை 3.40 மணிக்கு திறக்கப்பட்ட உடன், திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன் முதலில் வெளியே வந்தார். அவரை தொடர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு ஆகிய 4 பேரும், கையசைத்தப்படி வெளியே வந்தனர்.

18 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 4 வீரர்களும் இருந்ததால் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக இருப்பதை களைவதற்கு அவர்களுக்கு தசை அழுத்தம், மனோ திட பயிற்சி 7 நாட்கள் அளிக்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்தது. என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி என்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று பூமி திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சமூக வலை தள பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து