முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்து மத்திய பாரதிய ஜனதா அரசு மதவாதத்தை வளர்க்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      தமிழகம்
CM 2024-12-10

Source: provided

சென்னை : கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்து மத்திய பாரதிய ஜனதா அரசு மதவாதத்தை வளர்க்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21ம் தேதி வரை ஒருமாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும், தமிழகத்திற்கான திட்டங்கள், நிதி குறித்த கேள்விகள் எழுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு மதவாதத்தை வளர்க்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மத்திய பா.ஜ.க. அரசின் 11 ஆண்டுகள் என்பது, மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, எங்கும் - எதிலும் இந்தி & சமஸ்கிருதத்தைத் திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, முக்கியமாக, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என தேசிய சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக, மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், நடைபெறவுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும் - தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை - கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மக்களாட்சியின் குரலாக ஒலிக்கும் நமது தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், நடைபெறவுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய மக்களின் உள்ளுணர்வுகளையும் - தமிழ்நாட்டின் ஒருமித்த குரலையும் எடுத்து வைத்து, நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை - கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட அறிவுறுத்தியுள்ளேன். 

- முதல்ர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து